ஞாயிறு, 25 மார்ச், 2012

கம்பியூட்டரை எவ்வாறு பாதுகாப்பது ?

கம்பியூட்டரை எவ்வாறு பாதுகாப்பது ?



இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.  

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது

அட்டாச்மென்ட் ஆக scan@ virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.
 அன்புடன்.\அ.பாலாயாதவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக